M.SURESH NAYAGAM.(TRUSTEE)
மீட்பரின் தோட்டம் ஜெப ஊழியம் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தியதி தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் நகரின் அருகில் ஞாறாம்விளை என்ற இடத்தில் ஐந்து குடும்ப அங்கத்தினர்களைக் கொண்டு ஒரு வாடகை கட்டிடத்தில் வைத்து இந்த ஊழியம் ஜெப ஆராதனையோடு தொடங்கப்பட்டது.
சாட்சியின் மூலம் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக கர்த்தரே இந்த ஊழியத்தை ஸ்தாபித்தார். உற்றார் உறவினர்கள், இனஜனபந்துக்கள் உடன் பிறந்தவர்கள் போன்ற அன்புக்குரிய அனேகரால் கைவிடப்பட்டு, திக்கற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை அரவணைத்து, ஆறுதல் படுத்தி, கர்த்தருடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லி, அவர்களுக்காக ஜெபித்து, அவர்களுடைய எல்லா பிரச்சனைகளிலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை தைரியப்படுத்தி அவர்களுக்கு உதவிகள் செய்வதையே இந்த ஊழியத்தின் மூலம் செய்து வருகின்றோம்.
இம்மைக்குரிய அழிந்து போகின்ற உலக ஆசீர்வாதங்களைச் சேர்த்துவைப்பதற்காக அநேக ஆத்மாக்களை பிசாசானவன் ஆதாயப்படுத்தி வைத்திருப்பதினால், உலகத்தை சிநேகிக்கின்ற ஒருவரும் இந்த ஊழியத்திற்கென்று உதவி செய்ய முன்வரமாட்டார்கள். நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமும் தேவனுடைய ராஜ்யத்தின் அடையாளமாக இருப்பதினால், நீதியைப் பகைக்கின்றவர்கள் இந்த ஊழியத்தையும் பகைக்கத்தான் செய்வார்கள்.
நித்திய ராஜ்யத்துக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டுமா? இம்மைக்குரிய அழிந்து போகின்ற ஐசுவரியத்துக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டுமா? என்ற கேள்விக்கு இந்த ஊழியம் நித்திய ராஜ்யத்துக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த வேண்டும் என்றுச் சொல்லுவதினால், மிகப் பாடுகளின் மத்தியில் இந்த ஊழியம் நடந்துகொண்டிருக்கின்றது.
ஒரு கூட்டம் ஆத்துமாக்களை எங்களுக்காக ஆதாயப்படுத்தி, அனேகரைக் கவரத்தக்கதாக ஊழியத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பது மீட்பதின் தோட்டத்தின் நோக்கமல்ல; இந்த தோட்டத்தில் பத்து விருட்சங்கள் நாட்டப்பட்டாலும் கடைசி வரை கர்த்தருக்காக கனிகொடுத்து பத்து விருட்சங்களையும் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்க தகுதிபடுத்த வேண்டும் என்பது தான் மீட்பரின் தோட்டத்தின் நோக்கம். அதற்காகவே பாரத்தோடு ஜெபிக்கின்றோம்.
உலகத்தால் கைவிடப்பட்டவர்களை அரவணைப்பது
உதவுவாரற்ற நிலையிலிருக்கின்ற வியாதியஸ்தர்களுக்கு உதவி செய்வது
வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுப்பது
மீட்பரின் தோட்டம் ஊழியம், உலகத்தால் கைவிடப்பட்டவர்களை அரவணைப்பதும், உதவுவாரற்ற நிலையிலிருக்கின்ற வியாதியஸ்தர்களுக்கு உதவி செய்வதும், வீடு இல்லாமல் இருப்பவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுப்பதும், தனிமையிலே திக்கற்றுத் தவிப்பவர்களைத் தாங்கி நடத்துவது போன்ற அடிப்படைத் தேவைகளைச் செயல்படுத்துகின்றது. வாழ்க்கையில் எதிர்பாராத நிலையில் எல்லாவற்றையும் இழந்து பட்ட மரத்தைப் போல் வாழ்பவர்களை எங்கள் சாட்சியின் அனுபவத்தின் மூலம் சிந்தித்து செயல்படவைத்து மீண்டும் துளிர்க்கச் செய்து பூ பூத்து, காய்காய்த்து, கர்த்தருக்கென்று கனி கொடுக்க வைப்பதையே மீட்பரின் தோட்டம் ஊழியம் செய்து வருகின்றது.
இந்த மீட்பரின் தோட்டம் ஜெப ஊழியம் 2019 ஆம் ஆண்டு, ‘அறக்கட்டளையாக’ பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்றது.
மீட்பரின் தோட்டம் ஜெப ஊழியத்தின் மூலம் அனுபவ சாட்சிகளடங்கிய புஸ்தகங்கள் வெளியிடப்படுகின்றது. தேவைப்படுகின்றவர்கள் கீழ்கண்ட தொலைபேசி, மற்றும் கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
04651 224689, 9524443313, 9442532534.